Skip to main content

ஹம்சா பரமஹம்சா


 ஷங்கர்ராமசுப்ரமணியன்

ஞானிகள் என் இதயத்திடம் கிசுகிசுக்கின்றனர்

பிரபஞ்சம் எனக்காகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறது

சென்ற கோடைக் காலத்தைதுயரத்தில் தொலைத்துவிட்டேன்

இந்தக் கோடைக்காலம்

அவிந்த இலைகளின் வீச்சமாக 

மெல் ஈரக்காற்றாக

பளிச்சென்று உதிர்த்து நிற்கும் மரங்களாக

நினைவுகளின் கனமின்றி 

என் புலன்களை நிரப்பிப் புதுப்பிக்கிறது

தேவதச்சனுக்குக் கோவில்பட்டியில்

கோடையை உரைக்கும் முதல் குயில்

பெருங்குடி ரயில் நிலையத்தில்

மனமொழிந்த ஒரு நொடித் துளைக்குள் 

என்னிடம் பாடியது

ஹம்சா பரமஹம்சா

Comments