Skip to main content

Posts

Showing posts from January, 2015

ஆயிரம் சந்தோஷ இலைகள் கவிதைத் தொகுதி முன்னுரை

ஆற்றிடைத் தீவு

ஷங்கர்ராமசுப்ரமணியன்
எனது தொடக்கநிலைக் கவிதைகளை இப்போதுபடிக்கும்போது, அவை கருத்துகளால், கதைகளால், நாடகங்களால் நால்திசையிலும் இருந்துஒளிவீசும் வீடாய் இருந்துள்ளதை உணரமுடிகிறது. மொழிப்பிரக்ஞை, வடிவ உணர்வு, அர்த்தஅணுக்கம், வார்த்தைச் சிக்கனம் கூடிவராத நிலையில் அவை இருந்தாலும் அவற்றின் மேல்படர்ந்திருக்கும் ஒளியைப் பார்க்கும்போது எனக்கு ஏக்கமாக உள்ளது. அந்தக் கவிதைகள்கடந்த நிலப்பரப்புகள், முகங்கள், உணர்வுகள் எல்லாம் மேலெழுந்து சமநிலையின்மையைஉருவாக்குகிறது. பெருமிதம், அசூயை, கூச்சம், சுயகிண்டல் எனக் கலவையான உணர்வுகளை அடைகிறேன்.
அடுத்தடுத்த தொகுதிகளில் வெளிச்சம் குறைந்து, பயம் மிகுந்து, பேச்சொலியும்குறைவதை உணரமுடிகிறது. கதைமுற்றிலும் அகன்று சிறுகாட்சிகளாக, ஒரு மின்னல்வெட்டாக கவிதைகள் மாறின.பேச்சின் அரவம் குறைந்துவிட்டது. நான் பேசுவதற்கு விரும்புவன். எனது கவிதைகள் என்னைப் பேசாத இடத்துக்கு இழுத்துப்போகிறதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். காலப்போக்கில் வடிவங்களின் மீதுபெரும் ஏக்கம் உருவாகியுள்ளது.புதிய நிலப்பரப்புகளுக்காக என் கால்கள் கனவு காண்கின்றன.அதிகாலை மரங்கள், நிலங்கள், கூழாங்…

குற்றால லிங்கங்கள்

இளங்கோ புரோட்டா ஸ்டால்