Skip to main content

Posts

Showing posts from November, 2014

மிச்சம் உள்ள ஆவி

ஷங்கர்ராமசுப்ரமணியன்
 திருநெல்வேலி டவுணில் சந்திப்பிள்ளையார் முக்கின் இடதுபுறம்  உள்ளடங்கி இருக்கும் கல்லூர் பிள்ளைக் கடையில் பின்னரவில் பரிமாறப்படும் இட்லியை விள்ளும்போது ஆவி இப்போதும் வெளியேறுகிறது இட்லியில் ஆவியைப் பார்த்து ரொம்ப நாளாகி விட்டது ஆவிகள் என்று சொன்னால் அர்த்தம் விபரீதமாகி விடும் இருந்தும் திருநெல்வேலியின் ஆவி இட்லியில் மிச்சம் இருப்பதாகச் சொல்லிக் கொள்ளலாம். 

அந்த மனிதர்கள்

ஷங்கர்ராமசுப்ரமணியன்
ஏன் அவர்கள் ரயிலடிகளில் பொதுக்கழிப்பறைகளில் நடைபாதைகளில் சாலைகளில் சுவர் மூலைகளில் புகையிலை எச்சிலைத் துப்பித் துப்பி இந்த அழகிய மாநகரத்தை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்
உங்கள் ஆசுவாசமான பயணத்தின் நடுவில் சிக்னல் முனையில் காத்திருக்கும் போது ஏன் அவர்களின் குழந்தைகள் கிடைக்கும் சிறு அவகாசத்தில் அல்பப் பொருட்களின் பயன்பாட்டை உங்களுக்குக் காட்டி விற்று யாசகம் கேட்டு உங்கள் மென்மையான மனதைப் பிசைந்தெடுக்கிறார்கள்
அவர்கள் ஏன் சாலையோரத்தில் உறங்கும்போது காவல் நிலையத்தில் மோதல்சாவுகளில் செத்துத் தொலைக்கிறார்கள்