நீதிபதிகள் குடியிருப்பில் தனியே வசிக்கிறார் மாவட்ட சார்பு நீதிபதி வீட்டில் ஒரு நாற்காலி ஒரு உணவுத்தட்டு ஒரே ஒரு கத்தியை பராமரித்து வருகிறார் காலை நடைக்குச் செல்லும்போது அழைத்துச் செல்லும் வளர்ப்புநாயை தெருநாய்களுடன் குலாவ நீதிபதி அனுமதிப்பதில்லை குறைந்த கொழுப்புச்சத்து கொண்ட நார்ச்சத்து உணவையே கவனமாக தேர்ந்தெடுத்து உண்கிறார் அத்தியாவசியப் பொருட்கள் காய்கறிகளை சிறுவணிகர்களிடமே வாங்குகிறார் பாதுகாப்பான பரஸ்பரநிதி திட்டங்களிலேயே முதலீடுகளைச் செய்பவர் குழந்தைத் தொழிலாளர் முறை மரணதண்டனைக்கு எதிரானவர் இறைச்சி சாப்பிடாதவர் என்றாலும் நீதிபதியின் வீட்டுக்கத்தி கூர்மையானது நீதிமன்றத்தின் ஓய்வுஅறையில் மதிய உணவுக்குப்பின் சற்று இளைப்பாறி அன்றைய வழக்குவிவரக் கட்டுகளைப் பிரிக்கிறார் தாமதமாகிறது பணிவுடன் உணர்த்துகிறார் ஊழியர் வேகமாக கூடத்துக்குள் நுழைகிறார் நீதிபதி கசகசக்கும் வெயிலில் முடிவில்லாமல் மூச்சைப் பெருக்கியபடி குற்றத்தரப்பும் வழக்காடுபவர்களும் சாட்சி சொல்ல தாமதமாக வந்த மருத்துவரும் போலீஸ்காரர்களும் சேர்ந்து வளாகத்திண்ணையில் காத்திருக்கிறார்கள் உறக்கம் அழுத்த வழக்கைக் கேட்க தொடங்கிவிட்டார் நீதிபதி மருத்துவர், இறந்தவரின் தலைய…